உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆறு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு (DIG) இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேகாலை மாவட்டத்திற்கும், கேகாலையில் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் களுத்துறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நலன்புரிப் பிரிவிற்கும், பொலிஸ் நலன்புரிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கும் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin