பஹ்ரைனில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
2 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
நேற்று (21) இரவு அல்-ரிஃபா மற்றும் அவாலி இராணுவத் தளங்களில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவின் இரண்டு பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரானிய வான்வெளிக்குள் அமெரிக்க ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை விளக்கமளித்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள தொழிற்சாலைக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டதாகவும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்துள்ளதாகவும் பஹ்ரைன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மற்றும் தளவாடங்களைக் குறிவைத்து, கடந்த நவம்பர் 18ஆம் திகதி முதல் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

