முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம போதைப்பொருள் வழக்கில் கைது

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம போதைப்பொருள் வழக்கில் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இன்று (06) மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது, அவர் டுபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் காணொளிகள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. மேலும், பல்வேறு போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புகள் இருந்தமை மற்றும் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மற்றொரு சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin