சுரேஷ் சலேவை மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்க மருத்துவக் குழு அனுமதி

சுரேஷ் சலேவை மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்க மருத்துவக் குழு அனுமதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற முடியும் என மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

இதனையடுத்து, சந்தேகநபரான சுரேஷ் சலேவை இன்று (06) மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை CID முன்னெடுத்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin