இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை உயராது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கையில் இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேண முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அடுத்த மூன்று மாதங்களில் விசேட சிக்கல்கள் ஏற்படாத பட்சத்தில் தற்போதைய விலை மற்றும் விநியோக நிலைமை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சில எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தை குறைப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், அவ்வாறான 62 பகுதிகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் தொடர்பான பாரிய நெருக்கடி எதுவும் இல்லை என்றும், தேவையற்ற அச்சத்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

