அமெரிக்க தலைநகரில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா?
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் (Washington, DC), அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்
உயர்மட்ட அதிகாரிகளைக் குறிவைத்து கதிரியக்கப் பொருட்கள் கலந்த ‘டர்ட்டி பாம்’ (Dirty Bomb) அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
ஏழு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டியுள்ள CNN, தாக்குதலுக்கான சாத்தியமான இடங்கள்
மற்றும் இலக்குகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அதேநேரத்தில், உடனடி தாக்குதலுக்கான நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இல்லை என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
ரசாயன ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

