பிரித்தானியாவில் விமானப்படை தளத்திற்கு அருகே 5 பேர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

பிரித்தானியாவில் விமானப்படை தளத்திற்கு அருகே 5 பேர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

பிரித்தானியாவில் அமெரிக்க விமானப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய விமானப்படை தளத்திற்கு அருகே,

பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு இங்கிலாந்தின் RAF Fairford விமானப்படை தளத்தை நோக்கி அதிகாலை வேளையில் பயணித்த 3 சந்தேகத்திற்குரிய

வானூர்திகள் (Vans) தொடர்பாக அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து, ஆயுதம் தாங்கிய காவற்துறையினர் விரைந்து சென்று 5 பேரையும் கைது செய்தனர்.

முதலில் வெடிபொருள் சட்டத்தின் கீழும், பின்னர் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு 5-இன் (பயங்கரவாத செயலுக்கு திட்டமிடுதல்)

கீழும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

சந்தேகத்திற்குரிய வாகனங்களை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையிட்டு வருவதால்,

அப்பகுதியில் 400 மீற்றர் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சுமார் 85 வீடுகளில் இருந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விமானப்படை தளம்: RAF Fairford தளம் பிரித்தானியாவுக்கு சொந்தமானது என்றாலும், பனிப்போர் கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து: இந்த கைது நடவடிக்கையை பாராட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

சந்தேகநபர்கள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்த முற்பட்டதாகவும் இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை வழிநடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் அல்லது வெளிநாட்டு தொடர்புகள் குறித்து காவற்துறையினரால் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை; ஆரம்பக்கட்ட விசாரணைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin