கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்து கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, பாறைச் சரிவு மற்றும் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்படின் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

