கொலன்னாவை வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.15,000 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம்!

கொலன்னாவை வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.15,000 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம்!

கொலன்னாவை பகுதியில் ஏற்படும் தொடர் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ.15,000 மில்லியன் செலவிலான விசேட மழைநீர் வடிகால் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கான கள ஆய்வை அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர ஆகியோர் நேற்று மேற்கொண்டனர்.

இத்திட்டத்தின்கீழ் சலலிஹினி மாவத்தை, தஹம்வெல, பஸ்ஸன்ன மற்றும் தண்டுதொட்ட ஆகிய 4 பிரதான கால்வாய்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.

 

மேலும் விவேகாராம, துப்பாவெல, கொட்டிகாவத்த உட்பட 7 பகுதிகளில் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வீதிகள், சிறிய பாலங்கள், மதகுகள் நவீனமயமாக்கப்படுவதோடு, நடைபாதைகள் மற்றும் மரநடுகைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

Recommended For You

About the Author: admin