இலங்கையின் 4ஆவது மெட்ரோ பஸ் டிப்போ இரத்மலானையில் திறப்பு!

இலங்கையின் 4ஆவது மெட்ரோ பஸ் டிப்போ இரத்மலானையில் திறப்பு!

நாட்டின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையைத் திறம்பட முன்னெடுக்கும் நோக்கிலான ‘மெட்ரோ பஸ்’ (Metro Bus) திட்டத்தின் 4ஆவது டிப்போ அங்கம் இரத்மலானையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் மூலம், 30 புதிய மெட்ரோ பஸ்கள் கொழும்பு நகர்ப்புற சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளன. தலகம, கடவத்த, ஏகல ஆகிய இடங்களைத் தொடர்ந்து இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 5ஆவது டிப்போ 2027 ஜனவரியில் ஹோமாகமவில் திறக்கப்படவுள்ளது.

 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் காலி, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாகாண பிரதான நகரங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin