சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு – எதிர்வரும் 10ஆம் திகதி வரை உத்தரவு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.

