முதலீட்டாளர்களின் நீண்டகாலக் கனவு நனவானது

முதலீட்டாளர்களின் நீண்டகாலக் கனவு நனவானது: ‘ViYASA’ தேசிய வணிக வசதியளித்தல் மையம் திறப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான “ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) இன்று (22) கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர்களான சுனில் ஹந்துன்னெத்தி, கலாநிதி அனில் ஜெயந்த பெனாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் நிர்வாகத் தடைகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் சுங்கச் சிக்கல்களைத் தீர்த்து, அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதே இம்மையத்தின் முதன்மை நோக்கமாகும்.

 

பொதுமக்கள் நேரில் வராமலேயே, உத்தியோகபூர்வ இணையத்தளம் (nbfc.presidentsoffice.gov.lk) ஊடாகத் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறக்கூடிய வசதிகளும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin