சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த 48 வயது நபர் கைது!

சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த 48 வயது நபர் கைது!

இலங்கையில் சட்டவிரோத பிரமிட் முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் 48 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தடைசெய்யப்பட்ட பிரமிட் நிதித் திட்டமொன்றை முகாமைத்துவம் செய்து, அதில் பணத்தை முதலீடு செய்தவர்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்துதல், அதன் மூலம் பணம் ஈட்டுதல், திட்டத்தை ஊக்குவித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களின் நம்பிக்கையை மீறியமை தொடர்பிலும் அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin