மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த புதிய LINAC இயந்திரங்கள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த புதிய LINAC இயந்திரங்கள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் கதிரியக்க சிகிச்சை வசதிகளை மேம்படுத்த புதிய LINAC இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவும், CT Simulator வசதிகளை நவீனமயப்படுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைத் திறனை அதிகரித்து, காத்திருப்பு காலத்தைக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.

மேலும், வைத்திய நிபுணர்கள், மருத்துவ இயற்பியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட மனிதவளத் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் புற்றுநோயாளர்களுக்கு விரைவானதும் தரமானதுமான சிகிச்சையை வழங்கும் நோக்கில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin