சிறுவயதில் உண்டியல் காசைக் கொடுத்து உதவிய நல்ல உள்ளம்! 

சிறுவயதில் உண்டியல் காசைக் கொடுத்து உதவிய நல்ல உள்ளம்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அதிஷ்டம்

ஐந்து வயதில் உண்டியல் காசைத் தானமாகக் கொடுத்த சிறுமி: 18 வயதில் 48 மில்லியன் டாலர் லாட்டரி வென்று உலகை வியக்க வைத்த ஆச்சரியம்!

கனடாவைச் சேர்ந்த ஜூலியட் லாம்மூர் (Juliette Lamour) என்ற சிறுமி தனது ஐந்தாவது வயதில்,

 

ஹைட்டி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது உண்டியலை உடைத்துச் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் அன்போடு வழங்கினார்.

 

தனது தங்கையுடன் இணைந்து தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த சேமிப்பான 61.38 கனேடிய டாலர்களை அவர் முழுமையாகத் தானமாக அளித்தார்.

 

சிறு வயதிலேயே அவர் காட்டிய இந்த பெருந்தன்மையும் கருணையும் பலரையும் நெகிழச் செய்தது.

 

காலங்கள் கடந்த நிலையில், ஜூலியட்டுக்கு சமீபத்தில் 18 வயது பூர்த்தியடைந்தது.

 

அப்போது அவரது தாத்தா, முதல்முறையாக ஒரு லாட்டரி டிக்கெட் வாங்குமாறு அவரிடம் பரிந்துரை செய்தார்.

 

இதற்கு முன்பு எப்போதுமே லாட்டரி டிக்கெட்டியே வாங்கியிராத ஜூலியட், தாத்தாவின் பேச்சைக் கேட்டு தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார்.

 

அவர் வாங்கிய அந்த முதல் லாட்டரி டிக்கெட்டிற்கே அதிர்ஷ்டம் தேடி வந்ததுடன், அவருக்கு 48 மில்லியன் கனேடிய டாலர்கள் ஜாக்பாட் பரிசாகக் கிடைத்தது.

 

இவ்வளவு பெரிய தொகையை லாட்டரியில் வென்ற கனடாவின் மிக இளைய வயது நபர் என்ற பெருமையையும் அவர் இதன் மூலம் பெற்றார்.

 

சிறு வயதில் மற்றவர்களுக்குத் தனது சிறிய சேமிப்பைத் தானமாக வழங்கிய அந்தப் பெண்ணுக்கு,

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாகத் தேடி வந்திருப்பது உலகெங்கிலும் உள்ள மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin