சவூதி அரேபியா தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல்!!

சவூதி அரேபியா தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல்!!

இருவர் பலி, எட்டுப் பேர் காயம் – இராஜதந்திரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா!

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாண எண்ணெய் நகரான தம்மாமில் (Dammam) அமைந்துள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தின் (King Fahd International Airport) மீது நேற்று புதன்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்

 

இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாகச் சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து

 

பொது அதிகாரசபை இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

உயிரிழந்தவர்கள் ஒரு சவூதிப் பிரஜை மற்றும் ஓர் இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

காயமடைந்த எட்டுப் பேரில் சிலரது நிலைமை தீவிரமாகவும், ஏனையோருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

 

இத் தாக்குதலால் விமான நிலைய உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய விமான கண்காணிப்புத் தளமான Flightradar24 தகவலின்படி,

 

தாக்குதலைத் தொடர்ந்து தம்மாம் நோக்கி வந்த விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டன.

 

தற்போது விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

முன்னதாக இந்த மாதத்தில் சவூதி தலைநகர் மீது ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட பல தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து,

 

ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் நேற்று புதன்கிழமை உள்ளூர் விமானச் சேவைகளுக்காகத் திறக்கப்பட்டிருந்தது.

 

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தீவிரமடைந்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

 

சவூதி அரேபியாவிலுள்ள தனது தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலிருந்து சில இராஜதந்திரிகளையும் அவர்களது

 

குடும்பத்தினரையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் பிற

 

தூதரகங்களிலிருந்தும் பணியாளர்களைத் திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை வரைந்து வருகிறது.

 

மத்திய கிழக்கு முழுவதிலுமிருந்து இராஜதந்திரிகளைத் திரும்பப் பெறும் அதேவேளை, பிராந்தியத்திலுள்ள தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகளையும் பென்டகன் மீளப்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமெரிக்காவின் இந் நடவடிக்கையானது, ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்களில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணையக்கூடும் என்ற கவலைகளையும் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் (FCDO) கடந்த ஒக்ரோபர் 17 சனிக்கிழமையன்று தனது பயண வழிகாட்டலை இற்றைப்படுத்தியது.

 

அதன்படி, சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய காரணங்களுக்காகப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பிரித்தானியப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin