22 நாட்களாகக் காணாமல் போன 20 வயது மகள்! தேடி அலையும் தாய் – என்ன நடந்தது எனத் தெரியாமல் தவிப்பு!
யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடி அவரது தாய் அலைந்து வருகிறார்.
குறித்த இளம் பெண் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இறுதியாகக் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் தாயார் தெரிவித்துள்ளார்.
தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து 22 நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை மகள் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனத் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.
மகளுக்கு என்ன நடந்தது? அவர் எங்கிருக்கிறார்?
என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல், தனது மகள் மீண்டும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் தாய் தேடி அலைந்து வருகிறார்.
காணாமல் போன இளம் பெண் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

