பிரான்ஸில் வீரியமடையும் கலவரங்கள்! – சரிவைச் சந்திக்கும் சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் பதிவுகள்!
பிரான்ஸின் பாரிஸ், லியோன் மற்றும் நீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அண்மைநாட்களாக இடம்பெற்று வரும் தீவிர வன்முறைச் சம்பவங்கள் அந்நாட்டின் சுற்றுலாத்துறையைப் பெரிதும் பாதித்துள்ளன.
நகர மையப் பகுதிகளில் இடம்பெறும் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் அறைகளுக்கே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற Louvre அருங்காட்சியகம் மாணவர்கள் போராட்டத்தால் மூடப்பட்டதால், வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள ஹோட்டல்களின் அடுத்த ஆறு வாரங்களுக்கான முன்பதிவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொள்ளும் தங்களது குடிமக்களுக்கு விசேட பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதனால் உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்கள் மேலும் சில வாரங்களுக்குத் தொடர்ந்தால், பிரான்ஸின் சுற்றுலாத்துறை கட்டுப்படுத்த முடியாத பேரழிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஏனைய பயணிகள் பிரான்ஸின் தற்போதைய கள நிலவரங்களைக் அவதானித்துச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

