சீன விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டவராகப் பாகிஸ்தான் விண்வெளி வீரர்!

சீன விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டவராகப் பாகிஸ்தான் விண்வெளி வீரர்!

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதலாவது வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பாகிஸ்தான் விமானப்படை விமானி முகமது ஜீஷான் அலி படைக்கவுள்ளார்.

நாளை (நவம்பர் 25) பெய்ஜிங் நேரப்படி காலை 8:18 மணிக்கு ஜியுகுவான் ஏவு மையத்திலிருந்து லாங் மார்ச்-2F ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ள ஷென்சோ-24 விண்கலத்தில்,

சீன வீரர்களான டாங் ஹாங்போ மற்றும் வூ யி ஆகியோருடன் பேலோட் நிபுணராக அலி பயணிக்கவுள்ளார். தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கியிருக்கும் அவர், பின்னர் ஷென்சோ-23 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin