கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள 6 சுற்றுலா மற்றும் போக்குவரத்து கருமபீடங்களை (Counters) 3 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
10 நிறுவனங்களின் விலைமனுக்களைப் பரிசீலித்த பின்னர், அதிக வருமானம் ஈட்டும் வகையில் 6 முன்னணி நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுக்கு வரிகள் நீங்கலாக சுமார் ரூ. 1,200 மில்லியன் வருமானம் கிடைக்கவுள்ளது.
Casons Travel (ரூ. 251.03 மி), Explore Vacations (ரூ. 234.73 மி), J N W Lanka Tours (ரூ. 209.67 மி), Awavia Tours (ரூ. 189.66 மி), Ceylon Arrivals (ரூ. 183.60 மி) மற்றும் Ayubowan Tours (ரூ. 171.53 மி) ஆகிய நிறுவனங்களுக்கு இக்குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரின் பரிந்துரைக்கேற்ப இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள

