விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) புதிய தலைவராக, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், முப்படைத் துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மூத்த அதிகாரியாவார்.
நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவைகளை நவீனமயப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் விரைவில் தனது புதிய பதவிக் கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்

