கொழும்பு–கண்டி (A001) பிரதான வீதியில் வரக்காபொல நகரைச் சுற்றியுள்ள கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக, வரக்காபொல மற்றும் அம்பேபுஸ்ஸ சந்திப்புக்கு இடையிலான 2.32 கிலோமீற்றர் நீளமான மாற்றுப்பாதையின் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் 24 அன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 4,998 மில்லியன் ஆகும். பணிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றுப்பாதை நிறைவடைந்த பின்னர் வரக்காபொல நகரப் பகுதியில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதுடன், பயணிகள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தையும் மேலும் திறம்பட மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

