இலங்கைக்கு 11 புதிய இராஜதந்திரிகள்!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதர்களும் 4 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) காலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் தங்களது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூனை தருசலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புதிய இராஜதந்திரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இலங்கையின் வெளிநாட்டு உறவுகளில் புதிய தூதரக மட்டத்திலான பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இந்த நியமனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Recommended For You

About the Author: admin