ஸ்மார்ட் மின்வலையமைப்பை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி, நேர அடிப்படையிலான கட்டண முறையுடன் கூடிய 3 இலட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை நிறுவும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் இலங்கை மின்சார விநியோக நிறுவனம் (LECO) மூலம் இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மேலும் வலுப்படுத்துவதும், மின்வலையமைப்பை நவீனமயமாக்குவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.

