34 மாணவர்கள் மயங்கி விழுந்த அதிர்ச்சி சம்பவம்

34 மாணவர்கள் மயங்கி விழுந்த அதிர்ச்சி சம்பவம் – பள்ளி மதிய உணவில் உப்புக்குப் பதில் சலவைத் தூள்!

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள பார்சா அரசுப் பள்ளியில், இலவச மதிய உணவு உட்கொண்ட சுமார் 34 மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

அன்றைய தினம் மாணவர்களுக்குச் சோறும் உருளைக்கிழங்கு சோயா கறியும் வழங்கப்பட்டுள்ளது.

உணவில் உப்பு போதவில்லை என்று மாணவர்கள் முறைப்பாடு செய்ய, அங்கிருந்த ஊழியர் ஒருவர் உப்புக்குப் பதிலாக சலவைத் தூளைத் (washing powder) தவறுதலாக வழங்கியதாகப் பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த உணவைச் சாப்பிட்ட பிறகு மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர், மேலும் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மாணவர்கள் உடல்நலத்துடன் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பீஹார் கிராம வளர்ச்சி அமைச்சர் சிரவன் குமார் நேரில் சென்று உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin