ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண்

ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண்: வங்கி கணக்கில் ரூ.3 மட்டுமே இருந்ததால் திரும்பிய காசோலை

அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி (இந்திய ரூபா) நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிய நிலையில், வங்கிக் கணக்கில் ரூ.3 மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.நாகலட்சுமி எனும் பெண் பக்தர் கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தி வந்திருந்தார்.

அப்போது ராமர் கோயில் தரிசனம் முடித்தவர் ரூ.10,000 ரொக்கமாக நன்கொடை அளித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin