பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாள்

பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாள்: நாடு முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் கொண்டாட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சேவா சங்கல்ப் அபியான் 2026’ இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் மக்கள் அகல் விளக்குகளை ஏற்றி சிறப்பித்தனர்.

 

‘சேவா திவாஸ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன.

 

குஜராத்தின் அகமதாபாத், டெல்லியின் கர்த்தவ்ய பாதை மற்றும் உஜ்ஜைனின் க்ஷிப்ரா நதிக்கரை போன்ற முக்கிய இடங்களில் மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடி விளக்கேற்றி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், தூய்மைப் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin