சர்வதேச சந்தையில் ஐரோப்பிய யூரோ நாணயத்தின்  மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் ஐரோப்பிய யூரோ நாணயத்தின்

மதிப்பு கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கடன் தொடர்பான அச்சங்கள் மற்றும் ஐரோப்பாவை உலுக்கி வரும் எரிசக்தி

 

நெருக்கடி ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக நிதித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகச் சந்தைகளில் மிகவும் வலுவான நாணயங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யூரோ,

 

டாலருக்கு எதிராக 1.20 டாலருக்கும் மேல் உயர்ந்திருந்தது. ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து உயர்த்தும்

 

என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையே இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் அந்த நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து,

 

யூரோவின் மதிப்பு தொடர்ந்து வாராந்திரச் சரிவைச் சந்தித்து வருகிறது.

 

மதிப்பு வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணமாக, ஒரே நேரத்தில் வெடித்துள்ள இரண்டு பெரும் நெருக்கடிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

 

குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களால் திரவ இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

 

இதனால் ஐரோப்பாவில் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து,

 

நுகர்வோர் விலைப்பணவீக்கமும் செப்டம்பர் மாதத்தில் 3.8 சதவீதமாகக் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

 

பணவீக்கம் அதிகரிக்கும்போது வழக்கமாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு நாணயம் வலுவடைய வேண்டும்;

 

ஆனால் இந்த முறை அந்த நியதி தடம் புரண்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதாலும்,

 

எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாலும்,

 

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லாகார்ட் வட்டி விகிதங்களை உடனடியாகத் தீவிரமாக உயர்த்துவதைத் தவிர்த்து வருகிறார்.

 

இதனால், கடுமையான பணவீக்கத்தின் வலியை யூரோ எதிர்கொண்டாலும், வட்டி உயர்வுக்கான பலனை அதனால் பெற முடியவில்லை.

 

இதற்கிடையில், இரண்டாவது பெரிய அடியாகப் பாரிஸில் இருந்து பிரான்சின் நிதி நெருக்கடி வெடித்துள்ளது.

 

பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் புதிய வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் திணறி வருவதால்,

 

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் பத்தராண்டு கடன் பத்திர வட்டி விகிதங்களுக்கு இடையேயான இடைவெளி 2011-2012 கடன் நெருக்கடிக்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிக மோசமாக அதிகரித்துள்ளது.

 

பெருமளவு முதலீட்டாளர்கள் யூரோ நாணயத்திற்கு எதிராகச் சாதனை அளவில் Short contracts எனப்படும் வீழ்ச்சியை நோக்கிய வர்த்தகப் பந்தயங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

பிரான்சின் கடன் சந்தை நிலைத்தன்மை அடையாவிட்டாலும் அல்லது எரிசக்தி விலை தொடர்ந்து உயர்ந்தாலும்,

 

யூரோவின் மதிப்பு மேலும் சரிந்து 1.10 டாலர் வரை குறையக்கூடும் என்று சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: admin