வரலாறு காணாத வெப்பம்! நாம் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகிறது!
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம், நம் நினைவில் உள்ள காலங்களிலேயே மிக வலிமையானதாக இருக்கக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுடன் இந்த எல் நினோவும் இணைவதால், 2027ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறுவதற்கு “அதிக வாய்ப்பு” உள்ளது.
தெற்காசியாவில் (இந்தியாவில்) தென்மேற்கு பருவமழை ஏற்கனவே வழக்கத்தை விட மிகக் குறைவாகப் பதிவாகி வருகிறது.
பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 2°Cக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் 3°Cஐத் தாண்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தீவிர காலநிலை மாற்றங்களால் உலகெங்கும் உள்ள பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையைச் சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

