ரஷ்யாவின் அதிபரான புடின் 74-வது பிறந்தநாளை அக்டோபர் 7 கொண்டாடுகிறார்.

ரஷ்யாவின் அதிபரான புடின் 74-வது பிறந்தநாளை அக்டோபர் 7 கொண்டாடுகிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து ரஷ்யாவின் அதிபரான புடின்! விளாடிமிர் புடின் 1952 அக்டோபர் 7 அன்று லெனின்கிராடில் (இன்றைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) பிறந்தார்.

1975-ல் சட்டப்படிப்பை முடித்த அவர், சோவியத் பாதுகாப்புத் துறையில் பணியில் சேர்ந்தார்; பின்னர் கிழக்கு ஜெர்மனியிலும் பணியாற்றினார்.

 

1990களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், மத்திய அரசியலில் வேகமாக உயர்ந்தார்.

 

1998-ல் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான FSB-ன் தலைவரானார்;

 

1999-ல் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு இறுதியில் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியபோது,

 

புடின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். 2000-ல் முதன்முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அதன் பிறகு பிரதமர் மற்றும் அதிபர் என இரு பதவிகளிலும் தொடர்ந்து ரஷ்ய அரசியலின் மையத்தில் இருந்து வருகிறார்.

 

2024-ல் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புடின்,

 

2026-ல் தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

Recommended For You

About the Author: admin