இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் பிரஜைக்கு மலேசியாவில் சிறையும் அபராதமும்!

இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் பிரஜைக்கு மலேசியாவில் சிறையும் அபராதமும்!

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் இஸ்லாமியர் ஒருவருக்கு 14 நாள் சிறைத்தண்டனையும் 7,000 ரிங்கிட் அபராதமும் (சுமார் 570,388 இலங்கை ரூபாய்) விதிக்கப்பட்டுள்ளது.

முகமது அனிம் அடாம் (Mohamed Anim Atam) எனும் 56 வயதுடைய அந்நபர், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் வழக்கறிஞர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை.

 

மலேசிய ஊடகங்கள் வழக்கின் விவரங்களை வெளியிட்டன. முகம்மது அனிம், ஒரு பாதுகாவலர் அதிகாரி (security guard) ஆவார்.

 

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி ஜொகூரில் டாக்சியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் பேசினார்.

 

அவர் பேசியதைக் கேட்ட டாக்சி ஓட்டுநர், காரில் பதிவாகியிருந்த அந்த வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

 

மறுநாளே முகமது அனிம் மீது பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டது.

 

ஓகஸ்ட் 18ஆம் திகதி அவர் ஜொகூரில் உள்ள புக்கிட் சாகாரில் (Bukit Chagar) கைதுசெய்யப்பட்டார்.

 

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

Recommended For You

About the Author: admin