வரும்… ஆனால் வராது! உணவு ஓர்டர் பண்ணலாம்… ஆனால் சாப்பிட முடியாது!

வரும்… ஆனால் வராது! உணவு ஓர்டர் பண்ணலாம்… ஆனால் சாப்பிட முடியாது!

இந்தியாவில் FoodNeverComes எனும் தளம். 22 வித உணவுவகைகள். பிடித்ததைத் தெரிவு செய்யுங்கள். சாப்பாட்டுடன் ஓட்டுநர் வருவதைக் காணுங்கள்.

உணவு வந்துவிட்டது. ஆனால், வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற அழைப்பையும் பெறுவீர்கள்.

ஆனால், உண்மையில் நீங்கள் உணவு ஏதும் வாங்கவில்லை. “வாங்கியதை” செயலியில் மட்டுமே காணலாம்.

இந்தச் செயலி அறிமுகம் கண்டதிலிருந்து சுமார் 2.7 மில்லியன் வருகையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

ஒன்றை அனுபவிப்பதைவிட அதை வாங்கி, எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை உணர்வதில் மகிழ்ச்சி அதிகம் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதுபோன்ற தளங்கள், “dopamine sites” என்ற பிரிவைச் சேர்ந்தவை. பொருள் வாங்கும் உணர்வை, வாங்காமலே கொடுக்கின்றன அந்தப் பக்கங்கள்.

சாப்பாட்டுக்கு மட்டுமல்ல, இப்படி சில்லறை விற்பனை, விநியோகச் சேவைகள் மற்றும் விடுமுறைகள் ஆகியவற்றுக்கும் இத்தகைய தளங்கள் உள்ளன.

இவ்வாறான புதிய போக்கு தென்கொரியாவில் தொடங்கியது. தற்போது இது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

Recommended For You

About the Author: admin