இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க முதலிடம்!

இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க முதலிடம்!

சுவிட்ஸர்லாந்தின் லுசானே நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் 23 வயது இளம் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் தூரம் எறிந்து, வெறும் 9 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

 

ஏற்கனவே ரோம் டைமண்ட் லீக்கில் 92.62 மீட்டர் எறிந்து தேசிய சாதனை படைத்த ருமேஷ், 2026 பொதுநலவாயப் போட்டியில் 89.75 மீட்டர் எறிந்து தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

 

இதன்மூலம் அவர் உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக உருவெடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin