ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவருக்கு ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அழைப்பாணைக்கு அமையவே அவர் இன்று காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்

