Mrs Tourism World – 2026 சர்வதேசப் போட்டியில் அசத்திய இலங்கை தம்பதியினர்!!
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 12ஆவது Mrs Tourism World – 2026 சர்வதேசப் போட்டியில்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய நிமேஷா பிரேமச்சந்திர மகுடத்தை தனதாக்கிக் கொண்டார்.
அத்துடன், இப்போட்டியில் அவருடன் கலந்துகொண்ட அவரது கணவர் மலித் கிஹான் விதான,
“சிறந்த ஆதரவு வழங்கும் கணவர்” (Best Supporting Husband) என்ற சிறப்பு விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய அழகிகளைப் பின்தள்ளி நிமேஷா பிரேமச்சந்திர மகுடம் சூடியதுடன்,
போட்டி நிகழ்வுகளில் பல துணைப் போட்டிகளிலும் வெற்றிகளை ஈட்டியுள்ளார்.

