இலங்கை வரும் பிரிட்டிஷ் எயார்வேஸ்

இலங்கை வரும் பிரிட்டிஷ் எயார்வேஸ் – 11 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை

பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் கேட்விக் மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதற்கமைய, வரும் 2026 அக்டோபர் 23 முதல் இந்த விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதுடன், இது கடந்த 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் முதல் நேரடிச் சேவையாகும்.

 

இந்த வானூர்தி சேவைகள் வாரத்திற்கு மூன்று முறை பருவகால சேவையாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற நவீன வசதிகள் கொண்ட போயிங் 777 ரக விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

 

இப் பயணங்களின் போது பயணிகளின் வசதிக்காக ‘வேர்ல்ட் டிராவலர்’ (Economy), ‘வேர்ல்ட் டிராவலர் பிளஸ்’ (Premium Economy) மற்றும் ‘கிளப் வேர்ல்ட்’ (Business Class) ஆகிய மூன்று வகையான கேபின் சேவைகள் வழங்கப்பட உள்ளன.

 

இயற்கைக் கடற்கரைகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வளமான பண்பாட்டுச் சிறப்புகளுக்குப் புகழ்பெற்ற இலங்கைக்கு, பிரிட்டனிலிருந்து இத்தகைய நேரடிப் போக்குவரத்து வசதி மீண்டும் கிடைப்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

 

இந்த விமானச் சேவை அறிமுகம் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் சர்வதேசப் பயணிகளுக்குப் பெரும் வசதியை வழங்குவதுடன், நாட்டின் சுற்றுலாத் துறையையும் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Recommended For You

About the Author: admin