பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளம் செயலிழப்பு: சீராகும் வரை விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிப்பு!
பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி/நற்சான்றிதழ்களுக்கான தரவுத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்தில் இயங்கும் சான்றிதழ் பிரிவின் மூலம் விண்ணப்பங்கள் பெறுதல், அறிக்கைகள் கோருதல் மற்றும் சான்றிதழ் அச்சிடுதல் போன்ற பணிகள் இத்தொழில்நுட்ப முறைமை மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. நேற்று (20) நண்பகல் 12.50 மணி முதல் இத்தரவுத்தளம் செயலிழந்துள்ளது.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) மூலம் இச்சிக்கலைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், தரவுத்தளம் மீண்டும் வழமைக்கு வரும் வரை பொலிஸ் நற்சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. சீரானதும் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

