இலங்கைத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 6.5% ஆக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, உணவுப் பிரிவின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 3.3% ஆக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 4.9% ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், உணவல்லா பிரிவின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.3% ஆக இருந்து, ஜூலை மாதத்தில் 9.2% ஆகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

