கொழும்பில் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் உயிரிழப்பு

கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பஸ் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (20) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin