மொணராகலை – வெல்லவாய வீதியில் கோர விபத்து: 05 பேர் உயிரிழப்பு

மொணராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புக்கன பகுதியில், டிப்பர் ரக வாகனம் மற்றும் டிரெய்லருடன் கூடிய டிராக்டர் வாகனம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், மேலும் 08 பேர் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 03 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதியும் டிராக்டர் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொணராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin