ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
ராஜகிரிய, ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

