பெண்கள், சிறுவர் தொழில் சட்டமீறலுக்கான அபராதம் ரூ. 1 இலட்சமாக அதிகரிப்பு
பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை சட்டவிரோதமாக தொழிலில் அமர்த்துவோருக்கான அபராதத் தொகையை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 வரை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திருத்தச் சட்டமூலத்தை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இச்சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதைத் தொடர்ந்து, எவ்வித எதிர்ப்புமின்றி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

