கடற்கரையில் இடித்து அழிக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டிடங்கள்

கடற்கரையில் இடித்து அழிக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் : அஹங்கம – உனவட்டுன வரை தொடர்கிறது அதிரடி நடவடிக்கை

கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், அஹங்கம முதல் உனவட்டுன வரையிலான கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினத்திற்குள் குறித்த கட்டிடங்களை உரிமையாளர்களே அகற்ற வேண்டும் என அதிகாரிகள் கால அவகாசம் வழங்கியிருந்தனர்.

எனினும், காலக்கெடு நிறைவடைந்தும் கட்டிடங்கள் அகற்றப்படாத நிலையில், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடித்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin