பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர்.
இதன் மதிப்பு இலங்கை பெறுமதியை சுமார் 332 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், பழமையான கட்டிடமொன்று முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்காக பூமியில் பள்ளம் தோண்டிய போது, தங்கப் புதையல் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
18 வயதான கோபெ என்ற பணியாளர் இந்தப் புதையலைக் கண்டுபிடித்துள்ளார்.

