திருகோணமலையில் 29 எண்ணெய் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு

திருகோணமலையில் 29 எண்ணெய் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு: முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருகோணமலையில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

 

இதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த 29 தாங்கிகளும் திருகோணமலை பெற்றோலிய முனைய நிறுவனத்திற்கு (Trincomalee Petroleum Terminal Ltd) சொந்தமான 61 எண்ணெய் தாங்கிகளில் அடங்குகின்றன.

 

மேலும், திருகோணமலையில் எரிபொருள் மறு-ஏற்றுமதி மையம் (Fuel Re-export Centre) ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதேவேளை, கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று தாங்கிகளின் புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin