குளிர்காலத்தில் ஆர்டிக் கடலின் பனிப்பரப்பு மீது கடல் நீரை பம்ப் செய்து ஊற்றினால், அது மீண்டும் உறைந்து பனி இன்னும் தடிமனாகுமா? இதைதான் இப்போது ஆராய்ச்சியாளர்கள் சோதித்து பார்க்கிறார்கள்.
கனடாவில் உள்ள Cambridge Bay பகுதியில், Real Ice என்ற ஆய்வுக் குழு காற்றாலை மின்சாரத்தில் இயங்கும் பம்புகளை வைத்து கடல் நீரை உறைந்த பனியின் மேல் பரப்பியுள்ளனர். கடும் குளிரில் அந்த நீர் உடனே உறைந்து பனியின் தடிமனை அதிகரிக்கிறது.
2026 ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட அளவீடுகளின்படி, இப்படி நீர் ஊற்றப்பட்ட இடத்தில் பனியின் தடிமன், சாதாரண இடத்தை விட சுமார் 50 சென்டி மீட்டர் வரை அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இது இன்னும் ஆரம்பக்கட்ட சோதனை தான். இதனால் சுற்றுச்சூழலுக்கு வேறு பாதிப்பு வருமா, பெரிய அளவில் செய்ய முடியுமா என்பதை எல்லாம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். கார்பன் உமிழ்வை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு கால அவகாசம் கிடைக்கும் வரை, ஆர்டிக் பகுதியை தற்காலிகமாக பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் உதவுமா என்பது தான் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.
இயற்கையை காக்க இப்படி ஒரு செயற்கை முயற்சி தேவையா? உங்கள் பார்வையில் இது சரியான தீர்வா?

