பிறந்த குழந்தையோட இதயம் ஒரு வால்நட் அளவு கூட இருக்காது. அவ்வளவு பிஞ்சு இதயத்துக்கு பேஸ்மேக்கர் வைக்கணும்னா எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
அதுக்குத்தான் Northwestern பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு அதிசயத்தை உருவாக்கி இருக்காங்க.
ஒரு அரிசி பருக்கையை விட சிறிய பேஸ்மேக்கர். ஆமாங்க, கண்ணுக்கே தெரியாத அளவுக்கு சிறுசு. இதை ஊசி மூலமாகவே உடம்புக்குள் செலுத்திடலாம். பெரிய அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை.
இது எப்படி வேலை செய்யுதுன்னா, குழந்தையோட நெஞ்சு மேல ஒரு சின்ன பேண்டேஜ் மாதிரி ஒரு கருவியை ஒட்டிடுவாங்க. இதய துடிப்பு மாறினா உடனே அந்த கருவி தோல் வழியாக ஒரு லைட் சிக்னல் அனுப்பும். அந்த வெளிச்சத்துல தான் உள்ளே இருக்கிற பேஸ்மேக்கர் இயங்கும்.
இதுல ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்னா, குழந்தையோட இதயம் குணமானதும் இந்த பேஸ்மேக்கரை தனியா எடுக்க வேண்டியதே இல்லை. அதுவே உடம்புக்குள்ளேயே கரைஞ்சு போயிடும். தழும்பு இல்ல, வலி இல்ல, இரண்டாவது ஆபரேஷன் இல்ல.
குறிப்பா இதய அறுவை சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு தற்காலிகமா இதய துடிப்பை சீரா வைக்க இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று இந்த ஆய்வை உருவாக்கிய பேராசிரியர் John A. Rogers சொல்லியிருக்கார்.
வெறும் வெளிச்சத்தை வச்சே ஒரு பிஞ்சு உயிரை காப்பாத்துற தொழில்நுட்பம் இது. மருத்துவ உலகில் இது உண்மையிலேயே ஒரு பெரிய புரட்சி.

