இலங்கையில் டெங்கு தீவிரம்: மரணங்கள் 61 ஆக உயர்வு

நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் நேற்றைய தினம் வரை 25,530 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் மேல் மாகாணத்தின் கம்பஹாவில் 17,135 பேரும், கொழும்பில் 16,140 பேரும், மாத்தறையில் 5,574 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 42,835 நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12,260 பேரும், மத்திய மாகாணத்தில் 6,924 பேரும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதால் சுகாதாரப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

Recommended For You

About the Author: admin