இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை !!

இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை !!

கனடாவிலிருந்து சுற்றுலா சென்ற ஈழத்தமிழர் பலி

கனடாவில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பூபாலசிங்கம் சுபஈசன் என்ற குடும்பஸ்தர் முல்லைத்தீவு – நாயாறு கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

தாயகத்திற்கு சுற்றுலா வந்த அவர், தனது குடும்பத்தினருடன் முல்லைத்தீவு நாயாறு பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த வேளையே இந்த எதிர்பாராத சோகம் ஏற்பட்டுள்ளது.

 

சம்பவத்தன்று கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் ஆபத்தால் அவர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

 

உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதுடன், இந்தச் சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய குடும்பம், இந்தத் திடீர் விபத்தால் கண்ணீரில் மூழ்கியுள்ளதுடன், சடலம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin