எமது நிலம் எமக்கு வேண்டும்.
வயாவிளான் சந்தியில் நான்காவது வாரமாக போராட்டம்.
வலி வடக்கு வயாவிளான் சந்தியில் நான்காவது வாரமாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை காணியை இழந்த மக்கள் போராட்டம் நடாத்தினர்.
போராட்டத்தில் மக்கள் கருத்து தெரிவிக்கையில் பதவிக்கு வந்த அரசாங்கம் வலி வடக்கு காணி விடயத்தில் தனது வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
எமது பூர்வீக நிலங்களை யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவம் விவசாய தேவைக்காக பயன்படுத்தி வருகிறது.
நாங்கள் வாடகை வீடுகளிலும் குத்தகை காணிகளிலும் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் எமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும்.
ஆகவே எமது போராட்டம் ஓயப் போவதில்லை எமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கும் வரை தொடரும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்


